Wednesday, January 20, 2010

என் எண்ண மொழிகள்

என் விழி படுகைகளில்
கண்ணீர் கப்பல்கள்
வெள்ளோட்டம் பார்க்கின்றன
உன் பிரிவால் ...

கனவுகளை
நினைவக்குவர் சிலர் ஆனால்
என் நினைவுகளை
கனவாக்கி சென்றாய் நீ...

இது இலையுதிர் காலம் போல எனக்கு
சுற்றி இருப்பவர் எல்லாம்
சருகாகி உதிர்கின்றனர்!

தற்போது தூங்குவதும்
துக்க நிகழ்வாகியது
எனக்கு - உந்தன் கனவால்!

உன்னுடன் நான் வாழ
எத்தனித்த வேளையில்
உன் நினைவுகளுடன் மட்டும்
வாழ்ந்திருக்க சொல்லி
பிரிந்தாயே கண்மணியே...

உனக்கென்ன கனபொழுதில்
தொலைத்து கொண்டாய்
காற்றில் கலந்த
உன்னில் தொலைத்த
என்னை தேடுகின்றேன்
நான்!

- இரா பாலா

No comments: