சின்ன வயசுல நமக்கு எல்லாருக்குள்ளேயும் பிரமிப்பை உட்டிய ஒரு சிலவிசயங்களில் வெண்ணிலவும் ஒன்று. வெண்ணிலான்னு சொன்னாலேஉங்களுக்கு எல்லாம் நினைவுக்கு வருவது அம்மா நிலவை காட்டி சோறு உட்டியது, நிலவில் உள்ள பாட்டி வடை சுடுவதும் தான். எனக்கோவெண்ணிலான்னு சொன்னா நினைவுக்கு வருவது என்னுடைய கல்லூரி நாட்களில் நடந்த ஒரு ருசிகர சம்பவம் தான்.
இவன் நிலவ வச்சுக்கிட்டு எதுவும் science fiction சொல்ல போறான்னு தாப்பாமனகோட்டை கட்டதிங்க. இது ஒரு வித்தியாசமான கதை. நான் கல்லூரியின்முதலாம் பருவத்தில் படித்து கொண்டிருந்த வேளையில் நிகழ்ந்த சம்பவம் இது
நானும் என்னோடு படித்த மாணவ செல்வங்களும் ராமசுப்பு என்னும் கணிதவிரிவுரையாளர் நடத்திய தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தோம். ராக்கிங் பயம் காரணமாக எங்கள் கல்லூரியில் முதலாம் பருவ மாணவர்களுக்குவிடுதியில் தங்கி படிக்க அனுமதி இல்லை. நாங்கள் பின் நாட்களில் கல்லூரியின் மன்னர்களாக (கொஞ்சம் decenta சொன்ன ஏத்துக்க மாட்டிங்களே சரி, புரம்போக்குகளாக) திரிய நடத்த பட்ட பயுர்ச்சி வகுப்பு அது என்றே சொல்லலாம்.
நாங்கள் தங்கி இருந்த வீடுகளின் எண்ணிக்கை ஆறு. அதில் என் வீடும் என்நம்பர்கள் வாசித்த வீடும் மற்ற மாணவர்கள் தங்கி இருந்த வீடுகளிலிருந்துதனித்து இருந்தது. நான் தங்கி இருந்த வீட்டின் அருகே இரண்டு வீடுகளில் அந்தஊர் மக்கள் தங்கி இருந்தனர். அதில் என் பக்கத்து வீட்டில் ஒரு கணவன் மனைவி இருந்தனர். அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தது.
எனக்கு பிடித்த திரைப்பட பாடல்களை பாடுவது என்ன்பது ஒரு பழக்கமாகவேஇருந்தது. நான் கல்லூரியில் சேரும் பொழுது "நடிகர் கார்த்திக்" நடித்த படத்தில் வரும் "வெண்ணிலா வெளியே வருவாளா" என்ற பாட்டு மக்களிடத்தே மிகவும்வரவேற்ப்பை பெற்று இருந்தது என்னுளும் தான். நான் குளியலறயில் இருக்கும்போதும் சரி, படித்து கொண்டிருக்கும் போதும் சரி, வீட்டுக்கு வெளியே இருக்கும்போதும் சரி அப்பாடலை படுவது பழக்கமாக மாறிற்று.
இப்படியாக நாட்கள் செல்ல, ஒரு விஷயத்தை நான் கவனிக்க ஆரம்பித்தேன். நான் இப்பாடலை பாடும் பொழுதெல்லாம் என் பக்கத்து வீட்டில் இருந்தபெண்மணி என்னை பார்த்து முறைப்பது போல் எனக்கு தோன்றும். நானும் நம்பாடலை ரசித்து கேட்பார்கள் போல என்று அதை பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை. அரையாண்டு தேர்விற்கான முன்னேற்பாடு விடுமுறை வந்ததால்நான் என் சொந்த ஊரான ஈரோடு க்கு சென்று திரும்பினேன்.
பேருந்தை விட்டு கீழே இறங்கி என் வீட்டினை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தேன். இன்னும் இருபது அடிகள் இருக்கும் பொது என் அறைபங்காளன் துரைசாமி என்னை நோக்கி வேகமாக ஓடி வந்தான் (மன்னிக்கவும்உருண்டு வந்தான் என்பதே மிக சரியாக இருக்கும்). அவனை பார்த்ததும் "ஆஹாஎன்னே ஒரு நட்பு, பிரிந்திருந்த நம்பனை பார்த்ததும் அவனுக்குள் என்னே ஒருஉற்சாகம்" என்றெண்ணி களிப்புற்றேன். ஆனால் அவனோ நெருக்கி வந்து ஒரேகடுப்புடன் என்னை பார்த்தான்.
என்னடா இவன் சந்தோசமா வரானு பார்த்த இப்படி முறைக்கிறான் என்றெண்ணிகொண்டு இருக்கும் போதே, "நம்ம வீடு இப்போ இது இல்ல திவாகர் தங்கிஇருக்கனே அங்க மாத்திட்டோம்"ன்னு சொன்னான். அவனை பார்த்து நான் "ஏன்டா எதுவும் பிரச்சனை பண்ணிட்டியா"ன்னு வெகுளியா கேட்டேன். அதுக்குஅவன் சொன்ன பதில் என்னை திடுக்கிட செய்தது. "நீ தாண்டபிரச்சனை. அங்கபோகதே அந்த இரண்டாம் வீட்டு காரர் அடிசிருவார்"ன்னு சொன்னான்.
என்னகு தலையும் புரியல காலும் புரியல. "நானா!!! நான் என்னடா பிரச்சனைபண்ணினேன்?" என்று அவனிடம் வினாவ, அவன் "நீ எதுவும் பாட்டுபடுவியா"ன்னு கேட்டான். "ஆஹா நம் கலா ரசனை இவனுக்கும்தெரிந்திருகிறதே" என்று வியந்து நான் "அமான்ட பாடுறேன் கேக்குரியானு 'வெண்ணிலா வெளியே வருவாயா' என்று பாட ஆரம்பித்தேன். "டேய்நிப்பாட்டுடா நெட்டையா, அது தாண்டா பிரச்சனை" என்று அவன் சொல்ல நான்ஒன்றும் புரியாமல் விழி பிதுங்கி நின்றேன். "நான் பாட்டு பாடுறதுக்கும் வீடு காலிபண்ணதுக்கும் என்னடா சம்பந்தம்"என்று புரியாமல் நான் நிற்க, அதற்க்கு மேல்அவன் சொன்ன பதிலுக்கு நான் சிரிக்கவா அழவா என்று தெரியாமல் அவனைபார்த்தேன்.
"அமாண்டா அதுனாலதான் பிரச்சனை, அந்த வீடுகரம்மவோட பேரு என்னதெரியுமா உனக்கு"நு அடுத்த விடுகதையை போட்டான். நான் திரும்பவும் "டேய்உளரதடா, வீடு காலி பண்றதுக்கும், நான் பாடுவதர்ற்கும் அந்த பொம்பளையோடபேருக்கும் என்னடா சம்பந்தம் "என்று தெரியாமல் கேட்க அவன் "நீ பெரியஆளுடா என்னகே அந்த பொம்பளையோட பெயர் தெரியாது, இந்த பிரச்சனைக்குஅப்புறம் தான் தெரியும். ஆனா நீ அவ பெயர் 'வெண்ணிலா'ன்னு தெரிஞ்சுகிட்டுதினமும் 'வெண்ணிலா வெளியே வருவாயா' ன்னு பாட்டு பாடிருக்க "ன்னுசொன்னனே பார்க்கலாம் என்னகு தலைல இருந்து கால் வரைக்கும் எல்லாமேஆடி போயிற்று.
"ஆஹா வம்புல மட்டிகிட்டோமே"ன்னு நினைத்து கொண்டு இருக்க அவன் மேலும் "அவ புருஷன் காவல் துறை ஏட்டுடா, உன்ன அடிக்க தீயா நின்னான், எதோ நம்ப வீட்டு உரிமையாளர் இந்த பகுதி பஞ்சாயத்து தலைவரா போனதாலசமாதனம் பண்ணி விட்டார், அந்த பக்கம் இனி நீ தலை வச்சுகுட படுக்காதே, வாபுது வீட்டிற்கு போவோம்"ன்னு சொல்லி முடிக்கவில்லை நான் துண்டைகாணோம் துணியை காணோம்ன்னு ஓடியது தான் மிச்சம்.
பாருங்க ஜனங்களே இந்த சுதந்திர நாட்டுல ஒரு தனி மனிதன் அவனுக்கு புடிச்சபாட்டை வீட்டுக்கு வெளியே இருந்து பாட முடிவதில்லை. இது நடத்ததிற்குஅப்புறம் நான் கொஞ்ச காலத்திற்கு பாட்டே பாடவில்லை என்றால் பார்த்துகொள்ளுங்கள். அப்போது பயமாக இருந்தாலும், இப்போது இந்நிகழ்வைநினைத்து பார்க்கும் போதுஎல்லாம் எனக்குள்ளே சிரிப்பு வராமல் இருந்ததில்லை.
இந்த பதிப்போட படிப்பினை என்னவென்றால், இடம் பொருள் ஏவல் பார்க்காமல்எந்த காரியத்திலும் இடுபடாதிர்கள் என்பதே, மீறினால் நடப்பது அண்டவனுக்கேவெளிச்சம்.
No comments:
Post a Comment