Friday, September 19, 2008

குடிமகனே பெரும் குடிமகனே...இது ஒரு குடிமகனின் கதை

எல்லோருக்கும் வணக்கம்.  
  
 GCE பர்கூர் ,நாம் விதியை மாற்றிட உருவான இடம். ஒரு கல்லூரியாக உருமாறியிருந்த காலம் அது. நான் அக்கல்லூரியில் சேர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகியிருக்கும் ஆசிரியர்களிடம் எனக்கு இருந்த நல்ல பெயர் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறக்க தொடங்கிய காலம் அது. மதுவும் புகையும் என்னை அண்டி இராத காலம். 

  எல்லா கல்லூரியிலும் "பெருசு", "மாமா" என்ற பட்ட பெயருடன் யாராவது ஒருவர் இருவர் தலைவர்களாக இருப்பதே இலக்கமாகும். அது போலவே மேல் குறிப்பிட பட்ட பெயர்களுடனும் பழக்க வழக்கங்களூடணும் எங்கள் கல்லூரியிலும் இருவர் இருந்தனர். அவர்களை "The Big Ds" என்றே சொல்லலாம். 

முதல் D: துரைசாமி என்கிற பெருசு  
எறந்தாம் D: திவாகர் என்கிற மாமா (இவர்த்ங்க இந்த blog இன் owner) 

  எங்கள் கல்லூரியில் இவர்கள் ஆற்றிய பணி என்பது மிக பெரியது. அதை விரிவாக கூறினால் இந்த சிறு குறிப்பு ஒரு பெரிய கட்டுரையாக மாறிவிட கூடிய அபாயம் உள்ளதால் அத்தொகுப்பு வேறு பதிப்பாக வெளியிட பாடும். ஆசிரியர்களின் பணி கல்வியை போதித்லுடன் முடிவாத்ல் இவர்கள் தாங்களாக முன்வந்து மற்ற  மாணவர்களுக்கு குடி-புகையுடன் கூடிய கல்வியை கற்று கொடுத்தனர். எடுத்து காட்டு: எங்களுக்கு முதல் unit  டெஸ்ட் நடந்துகொண்டிருந்தது. 

இவர்கள் இருவரும் மாலை 6 மணிபோல் என் வீட்டில் இருந்து பேசி கொண்டிருந்தனர். என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டு கேட்ட போது. துரை கூறுகிறார் "சரக்கு ஏத்திக்கிட்டு படிச்சா நல்ல ஏறும்டா மாப்ளை". அதற்கு இன்னொருவன் கூறிய பதில் "செரியா சொன்னடா சரக்கு அடிச்சுட்டு ராத்திரி ரொம்ப நேரம் முழிச்சுருந்து படிக்கலாம், வா போவோம்" என்று. குடித்து விட்டு வந்து இருவரும் மட்டையானது வேறு கதை. இவ்வாறு படிப்பையும் குடிப்பதையும் சங்கமிக்க வைத்தது தான் இருவரின் சிறப்பு. 

இவர்களை பற்றி நான் கூற தேவை இல்லை பல பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் நான் இங்கு பேச வந்தது இவரை பற்றி இல்லை. தான் குடிப்பதர்க்கு அடுத்தவனை கெடுத்த ஒருவனை பற்றி தான் எழுத உள்ளேன். 

அவர் பெயர்: பாரத் என்கிற கோட்டி 

  அப்பொழுது மாணவர் தலைவனாக இருந்த பாரத்துடன் ( இவர் பின்னாளில் எங்கள் கல்லூரிகே நாட்டாமை ஆனார் என்பது வரலாறு) சேர்ந்து நானுண்டு என் வேலையுண்டு என்றிருந்தேன். பிக் D's இன் பாதிப்பு என்னுள் சிரிதளவும் ஏற்படவில்லை என்றாலும் மாணவர் தலைவனுக்குள் ஏற்படுவதை என்னால் தவிர்கவோ மற்றும் தடுக்கவோ முடியவில்லை. 

  இப்படியாக சென்று கொண்டு இருந்த என் கல்லூரி வாழ்க்கையில் ஒரு நாள், பாரத் என்னை அழைத்து கொண்டு ஏதும் சொல்லாமல் பர்கூர் சென்றான். நானும் ஏதோ புதிய படத்திருக்கு செல்கின்றோம் என்ற நினைப்புடன் அவனுடன் சென்றேன். பர்கூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும் நேராக wine shop முன் சென்றவன் என்னை அழைத்து "இன்று குடித்து பார்த்து விட வேண்டும்" என்றான். என்னையும் குடிக்க சொன்னான். நான் மறுத்ததால் அவன் மட்டும் ஒரு அரை பியர் வாங்கி குடிக்க ஆரம்பித்தான். அப்பொழுது பார்த்து எங்கள் ஃபிஸிக்ஸ் லேப் assistant wine ஷாப் இல் நுழைந்தார் எங்களை பார்த்தும் பார்க்காதத்தைப்போல் சென்று  குடித்துவிட்டு சென்றார். பாரத் எதை பற்றியும் கவலை படாதவனாக அறை பீரை குடித்த கிறக்கத்தில் உட்கார்ந்திருந்தான் மீதியை குடிக்க முடியாமல் மீதம் வைத்து விட்டு அறைக்கு திரும்பினோம். 

  அடுத்த நாள் கல்லூரிக்கு சென்றோம். அன்று எங்களுக்கு ஃபிஸிக்ஸ் லேப் பீரியட் இருந்தது. லேபிற்கு சென்று பல புதிய "முயற்சிகளில்" ஈடுபட்டு கொண்டிருந்த என்னை ஃபிஸிக்ஸ் ஆசிரியை அழைத்தார்கள் . நானும் அவர்களிடம் நக்கலடித்து வெட்டி கதைகள் பேசுவது வழக்கம் என்று சென்றேன். நான் சென்று அவர்கள் முன் நிற்க கூட இல்லை அதற்குள் கேள்விக்கணையை தொடுத்தார் அவ்வாசிரியை. 

  "பாலா நீ நேற்று ஏதோ பரத்தை எங்கோ கூட்டி சென்றையாமே, பார்த்துடா நல்ல புள்ளைய கெடுக்காதே"  
என்று சொன்னதும் என் இதயம் சுக்கு நூறக வெடித்தது. ஸ்கூலில் ஒரு சில அடிதடிகளில் ஈடு பட்டிருந்தாலும், புகைப்பவர்கள் மற்றும் குடிப்பவர்களின் சவகாசம் இருந்தாலும் கூட நான் கல்லூரியில் சேர்ந்து இதுநாள் வரை ஒரு நல்ல பிள்ளையாகவே (சரி விடுங்கப்பா நம்ப கல்லூரி மொழியில் சொன்னாள் "பழம்") இருந்திருக்கிறேன் என்பதே உண்மை. அப்படி பட்ட என்னை பார்த்து ஒரு ஆசிரியர் நீ குடிப்பது இருக்கட்டும் அடுத்தவனையும் ஏன் கெடுக்கிறாய் என்கிற ரீதியில் கேள்விகளை கேட்டால் எப்படி இருக்கும் கொஞ்சம் நினைத்து பாருங்கள் என் அருமை தோழர்களே. உள்ளே நிகழ்ந்தவற்றை கேள்வி பட்ட பரத், மிகவும் மனம் நொந்து லேப் ஐ விட்டு வெளியே வந்த என்னை பார்த்து  கேட்ட அடுத்த கேள்வி என்ன தெரியுமா 

"என்ன இன்னைக்கும் போகலாமா"  
மிகவும் மன விரக்தியில் இருந்த என்னை பாருக்கு கூட்டி சென்று Gin அடிக்க வைத்தான் பரத். இது அதோடு நின்று இருந்தால் பரவாயில்லை அடுத்த நாளுமல்லவா சென்றோம் பாருக்கு. இப்படியாக மாதங்கள் கடக்க யாருக்கும் தேயாமல் குடித்து கொண்டிருந்தது போய் அந்த வருடம் வந்த டிசம்பர் 31 அன்னைக்கு அனைவர் முன்னும் Old Monk ஐ ராவாக அடித்து புகை பிடிக்கும் பழக்கத்தையும் கற்று கொண்டேன். 

இவ்வாறு என்னை கெடுத்த பெருமை பாரத்தையே சாரும் என்று கூறி என் உரையை முடித்து கொள்கிறேன். 

நன்றி 
வணக்கம் 

பால சுப்ரமணியம் என்கிற எக்ஸ்-அப்பாவி மாணவன்

பின் குறிப்பு: இந்த நல்லவனின் போட்டோ பாருங்கள் நண்பர்களே கையில் தம் - diwa





No comments: